ஜுனில் ஆப்கான் அணி இலங்கை வருகை

மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜுன் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது.

இந்த சுற்றுப்பயணத்தில் ஆப்கான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஜுன் 2, 4 மற்றும் 7 ஆம் திகதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனினும் போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் பற்றிய விபரம் பின்னர் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை அணி உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஆடுவதற்காக வரும் ஜூன் நடுப்பகுதியில் சிம்பாப்வே பயணிக்கவுள்ள நிலையில் அந்தப் போட்டிகளுக்கு முன்னரே இந்தத் தொடரை நடத்த ஏற்பாடாகியுள்ளது.

இந்தத் தொடர் பற்றி இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக இன்னும் அறிவிக்காதபோதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளி, ஒலிபரப்பு உரிமையை பெற்றுக்கொள்வதற்கு விருப்பத்தை வெளியிடும் நிறுவனங்களுக்கு அதற்கான விண்ணப்பத்தை இலங்கை கிரிக்கெட் சபை கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணி கடைசியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அதில் மூன்று ஒருநாள் போட்டிகள் இடம்பெற்றபோது தொடர் 1–1 என சமநிலை பெற்றது.

Related Articles

Latest Articles