ஜுன் 22 ஆம் திகதி விஜய் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து

முன்னணி நடிகராக இருக்கும் விஜய் பிறந்தநாளில் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதற்காக ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் அன்றைய தினத்தில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்காக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளியுடன் விஜய் கைகோர்க்க உள்ளதாகவும், படத்தை தில் ராஜு தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், விஜய் தற்போது நடித்து வரும், ‘தளபதி 65’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வர இருப்பதால் இரட்டை விருந்து கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Paid Ad
Previous articleஐசிசி டெஸ்ட் தரவரிசை – திமுத் கருணாரத்ன 11ஆவது இடத்தில்!
Next articleபோவை தோட்ட நிர்வாகத்தின் கொட்டத்தை அடக்கிய செந்தில் தொண்டமான்!