Update
நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உறவினர்களுடன் பொலிஸார் கலந்துரையாடினர். வைத்தியசாலையில் சிகிச்சைப்பெறும் நபர்களின் பெயர்களையும் தெரியப்படுத்தினர்.
………
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் உயிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 33 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இவருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளனர்.
சிறைக்குள் இன்று பிற்பகல் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர உதவுவதற்காக காவல்துறை சிறப்பு அதிரடிப்படையை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அருகில் உள்ள பொலிஸ்நிலையங்களின் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
கைதிகளின் உறவினர்கள் தற்போது சிறைச்சாலை வளாகத்தில் குவிந்துள்ளனர்.
அதேவேளை, பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலை கூரைமீது ஏறி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
