அயியத்தொல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்குகளின் போது துப்பாக்கிச் பிரயோகங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு, ஆர்மீனியாவிலுள்ள ஈரான் தூதரகம் பதிலடி கொடுத்துள்ளது.
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் “அனைவரையும் தம்மால் ஒழித்துக்கட்ட” முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ஆக்சியோஸ் செய்திச் சேவைக்குத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அவ்வாறு செய்தால் “பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அங்கு எவரும் எஞ்சியிருக்க மாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.
மேலும், இறுதிச் சடங்கில் ஈரானிய மக்கள் அழுவதைக் கண்டு தான் ஆச்சரியமடைந்ததாகக் குறிப்பிட்ட டிரம்ப், மக்கள் காமேனியை வெறுக்கிறார்கள் என்றே தான் நினைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், ஏரெவானில் (Yerevan) உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
“மனிதர்களைக் கொல்ல முடியும், ஆனால் கொள்கைகளைக் கொல்ல முடியாது. நீங்கள் அயியத்தொல்லா காமேனியைக் கொன்றுவிட்டீர்கள், ஆனால் உண்மையில், நீங்கள் ஒரு வாசனைத் திரவியப் பாட்டிலையே உடைத்திருக்கிறீர்கள். அதன் வாசம் இப்போது எல்லா இடங்களிலும் பரவியுள்ளது. நாகரிகமோ, வரலாறோ, அல்லது கௌரவமோ இல்லாததால் உங்களால் இந்த விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியாது.”
