ஜே.வி.பிக்கு எதிராக வழக்கு தொடுக்க தயாராகும் டிலான்

எனது அரசியல் வரலாற்றில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பை இட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர், பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களின் பண மோசடியை அம்பலப்படுத்தினர். இதன்போது, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் பெயரும் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு அவர் தமது எதிர்ப்பை ​வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

28 ஆண்டுகளாக பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தவர். வணிகவியல் மற்றும் பார் தேர்வில் சிறப்புப் பட்டம் பெற்றவர், இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவான என்னை போன்ற அரசியல்வாதிக்கு, மே தினக் கூட்டத்திற்கு உணவு கொண்டுவந்து போலியான உண்டியல் ரசீதுகளைப் பெற்றதாக ஜே.வி.பி தலைவர் குற்ற ஞ்சாட்டியுள்ளார்.

28 வருடங்களில் நான் கேள்விப்பட்ட மிகப் பெரிய முட்டாள்தனம் என்று கூறலாம்.

காலியில் மே தினக் கூட்டத்திற்கு எல்லவில் உள்ள கடையொன்றில் இருந்து உணவுப் பொட்டலங்களை எடுத்துச் சென்றமைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த பொய்யான குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை எனது சட்ட ஆலோசகர்களிடம் விட்டுவிடுகிறேன்.

தேசிய அரசாங்கமே பொருத்தமானது என சமகி ஜன பலவேக உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை நான் பாராட்டுகின்றேன். சமகி ஜன பலவேகவில் இணையுமாறு பரிந்துரைத்திருந்தார். நான் ஒருபோதும் முதலாளித்துவ முகாமில் இருக்க மாட்டேன்.

தேர்தலுக்குத் தள்ள முற்படும் நாடு தேர்தலுக்குத் தயாராகாத நிலையில், அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காபந்து அரசாங்கத்தை அமைக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

Related Articles

Latest Articles