ஜே.வி.பிக்கு சிவப்பு யானையென பெயர் சூட்டினார் சஜித்

“ பொருளாதாரக் குழுவும் வேலைத்திட்டமும் இல்லாத சிவப்பு யானைக் குட்டிகள் ஜனாதிபதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நாடகம் ஆடுகிறன.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய சிவப்பு வண்ணப் புரட்சியாளர்கள் சிவப்பு யானைக் குட்டிகளாக மாறியுள்ளனர். இந்த சிவப்பு வண்ண சகோதரர்கள் ஜனாதிபதியுடன் டீல் போட்டுக் கொண்டு அரசாங்கத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசையில் விவாதத்திற்கு வருமாறு அழைக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பொருளாதாரக் குழு விவாதத்திற்கு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்தபோது, பொருளாதாரக் குழுவொன்று இல்லாத மக்கள் விடுதலை முன்னணி அதை விட்டுவிட்டு, தலைவர்கள் இடையே விவாதம் என தம்பட்டம் அடித்துக் கொண்டு பேசி வருகிறது. பொருளாதாரக் குழுவின் விவாதம் மற்றும் தலைவர்களின் விவாதம் ஆகிய இரண்டிற்கும் இரு நாட்களை ஒரே நேரத்தில் ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர தெரிவித்தார்.

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில், நாட்டை யாரால் காப்பாற்ற முடியும் என்பதை அறிய மக்களுக்கு உரிமை உள்ளது. நாட்டில் டொலர்கள் இல்லாமல் போயுள்ள இந்த தருணத்தில், பெரிதாக பேசி வரும் சிவப்பு யானை குட்டிகளுக்கு பொருளாதார குழுவும் வேலைத்திட்டமும் கூட இல்லை. அவர்கள் விவாதத்திற்கு தயார் இல்லை என்றாலும், இரண்டு விவாதங்களுக்கும் தாம் தயார் என்றும், பொருளாதார குழுக்கள் மத்தியிலான விவாதத்தின் பின்னர் தலைவர்களிடையேயான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

விவாதங்களைப் பற்றிப் பேசும் போது, சிவப்பு யானைக் குட்டிகளின் தலைவர் தமது தலைவரான ஜனாதிபதியை அணுகி, அரசாங்கத்துக்கு சொந்தமான தொலைக்காட்சி அலைவரிசையில் சமீபத்தில் நாடகம் ஒன்றினை ஆரங்கேற்றினர். பொருளாதார குழு இல்லாதது அவர்களின் தவறாகும். அவர்களால் பணியாற்ற முடியாவிட்டாலும், எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாம் பல்வேறு பணிகளை முன்னெடுத்துள்ளோம். எனவே, எந்த நேரத்திலும் போட்டியிட்டு பணியாற்ற தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles