ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரும் சுதந்திரத்துக்கான நடைபயணம் இன்று கொழும்பில் நிறைவு

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், அவரது துறவற ஆடை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபயணம் இன்று (15) கொழும்பை வந்தடையவுள்ளது.

மகா சங்கத்தினரின் ஏற்பாட்டில் ‘சுதந்திரத்திற்கான நடைபயணம்’ என்ற பெயரில் கடந்த 10 ஆம் திகதி கண்டியில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த நடைபயணம் ஐந்தாவது நாளான நேற்று கடவத்தை நகரை வந்தடைந்தது.

தொடக்கத்தில் இதில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தற்போது எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றுத் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

“நாங்கள் நாளை (இன்று) கொழும்பு வருகிறோம். காகிதம் மற்றும் பேனாவைத் தயார் நிலையில் வைக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்துகிறோம். ஞானசார தேரருக்கு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு வழங்குவதற்கு அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேரணியில் பங்கேற்ற தேரர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளையில், ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையும் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

Related Articles

Latest Articles