சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்காக முன்நின்ற அரசாங்கம், ஞானசார தேரர் விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டைப் பின்பற்றுவது ஏன் என்று அம்பிட்டிய சுமனரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியதாவது,
“சரத் பொன்சேகா, ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதியால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதனை எவரும் சவாலுக்குட்படுத்தவில்லை. ஆனால், ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பு எவ்வாறு சட்டவிரோதமாகும்?
சிங்கள, பௌத்த மக்களை மண்டியிட வைப்பதற்கும், புலம்பெயர் டயஸ்போராக்களைத் திருப்திப்படுத்துவதற்காகவுமா இவ்வாறு செய்யப்பட்டது எனக் கேட்கின்றோம்?
அனோஜனைக் காப்பாற்றிவிட்டதாகக் கூறும் அரசாங்கம், ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காதது ஏன்? மகாசங்கத்தினர் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்; அது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை” என்றார்.
