டயகம பகுதியைச் சேர்ந்த மேலும் 10 பெண்கள் ரிஷாட் வீட்டில் வேலை செய்துள்ளனர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010 ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளனர் என்று பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது தெரியவந்துள்ளது என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு பணியாற்றிய 10 பேரும் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 5 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles