டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து ₹ 22,000 கோடி மதிப்பிலான மெகா திட்டத்தை குஜராத் மாநிலம் ஆரம்பித்துள்ளது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில் ராணுவத்தினருக்கான போக்குவரத்து விமானங்களை டாடா மற்றும் ஏர்பஸ் தயாரிக்கும் ஒரு பெரிய புதிய ஒப்பந்தத்தில் குஜராத் இறங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான செலவு ₹ 22,000 கோடி அல்லது 2.66 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

“இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவ விமானம் தயாரிக்கப்படும் இதுபோன்ற முதல் திட்டம் இதுவாகும். திட்டத்தின் மொத்த செலவு ₹ 21,935 கோடி. இந்த விமானத்தை பொதுமக்கள் தேவைகளுக்கும் பயன்படுத்தலாம்” என்று பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் கூறினார்.

குஜராத் தனது அடுத்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கத் தயாராகும் நேரத்தில், ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் வாக்குறுதியுடன் இந்தப் புதிய திட்டம் வருகிறது.

செப்டம்பரில், வேதாந்தா லிமிடெட் மற்றும் தைவானின் ஃபாக்ஸ்கான் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் சில்லுகள் (செமிகண்டக்டர்கள்) தயாரிக்கப்படும் 19.5 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெறுவதற்கு குஜராத் முன்னின்று விளங்கியது. அவர்களின் ஆலைகள் மின்சாரத்தில் கணிசமான மானியத்துடன் அகமதாபாத் அருகே அமைக்கப்படும் மற்றும் மாநிலத்திலிருந்து வழங்கப்படும் பிற சலுகைகளுடன் 100,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா-ஏர்பஸ் திட்டம், ராணுவ தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் ஏனைய நாடுகளில் சார்ந்திருப்பதைக் குறைக்க பிரதமரின் “மேக்-இன்-இந்தியா” பிரச்சாரத்திற்கு குறிப்பிடத்தக்க லாபமாக கருதப்படுகிறது.

ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 போக்குவரத்து விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. “ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 16 விமானங்கள் பறக்கும் நிலையில் வழங்கப்படும், மேலும் 40 இந்தியாவில் தயாரிக்கப்படும்” என்று பாதுகாப்பு செயலாளர் கூறினார். “இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனத்தால் ராணுவ விமானம் தயாரிக்கப்படும் இதுபோன்ற முதல் திட்டம் இதுவாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, முதல் 16 பறக்கும் அல்லது இயக்கத் தயாராக இருக்கும் விமானங்கள் செப்டம்பர் 2023 மற்றும் ஆகஸ்ட் 2025 க்கு இடையில் பெற திட்டமிடப்பட்டுள்ளது. குஜராத்தில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் செப்டம்பர் 2026 இல் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய C-295 போக்குவரத்து விமானம் “இந்திய விமானப்படையின் பழைய அவ்ரோ விமானத்திற்கு பதிலாக” இருக்கும் என்று அரசாங்கம் கூறியது.

Related Articles

Latest Articles