டித்வா புயலினால் உயிரிழந்த கம்பளை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை நினைவுகூர்ந்து, கம்பளையில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
டித்வா புயல் தாக்கி ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், அன்றைய தினம் ஏற்பட்ட பேரழிவையும், உயிரிழந்த மக்களையும் நினைவுகூரும் வகையில் இந்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கம்பளை – நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள பழைய பாலத்தின் மீது இந்த நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, சர்வமதத் தலைவர்கள், பொலிஸார், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பாலத்தின் முழுப் பகுதியிலும் மெழுகுவர்த்திகளை ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அத்துடன், திட்வா புயலினால் ஏற்பட்ட பேரழிவையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
