டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வருகை

40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் மற்றுமொரு கப்பல் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கப்பல் நேற்றிரவு (16) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மாதிரி பரிசோதனையின் பின்னர் குறித்த கப்பலின் எரிபொருள் இன்று பிற்பகல் இறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

41,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று நேற்று அதிகாலை நாட்டை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles