டெல்லி அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றிநடை

டெல்லி கேபிடல்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் நேற்று 38 ஆவது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும்,கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.

துபாயில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ஓட்டங்களைச் சேர்த்தது. டெல்லி அணியில் துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 61 பந்துகளில் 106 ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து, 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.

Paid Ad