டெல்லி அணி வெற்றிநடை – முதல் போட்டியிலேயே சென்னை தோல்வி!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றது.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பமானது. போட்டியின் 2-வது நாளான நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரிஷாப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்களாக டு பிளசிஸும் ருதுராஜ் கெய்க்வாட்டும் களம் இறங்கினர். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. டு பிளசிஸ் ரன் எதுவும் இன்றி எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 5 ரன்களில் வெளியேறினார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோயின் அலி- சுரேஷ் ரெய்னா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24 பந்துகளில் 36 ரன்கள் அடித்த மோயின் அலி, அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு (23 ரன்கள்) ஓரளவு தாக்குப்பிடித்தார். எனினும் மறுமுனையில் சுரேஷ் ரெய்னா அசத்தலாக ஆடினார். ஏதுவான பந்துகளை சிக்சருக்கு விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 3 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 54 ரன்கள் எடுத்து ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டோனி ரன் எதுவும் இன்றி போல்டு ஆகி வெளியேறினார். கடைசி கட்ட ஓவர்களில் சாம் கரன் மற்றும் ஜடேஜா அதிரடி காட்டினர். குறிப்பாக சாம் கரன் டெல்லி அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தார். இதனால் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கரன் 15 பந்துகளில் 34 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில், ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். அதிரடியில் கலக்கிய இந்த ஜோடியில் பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் கடந்து அசத்தினர். இதனைத்தொடர்ந்து இந்த ஜோடியில் பிரித்வி ஷா 72 (38) ரன்களும், ஷிகர் தவான் 85 (54) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஸ்டோய்னிஸ் 14 (9) ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் கேப்டன் ரிஷாப் பண்ட் 15 (12) ரன்களும், ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், ப்ராவோ ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles