டெல்லி அணி 4 ஓட்டங்களால் வெற்றி!

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன்படி டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன், குஜராத் டைட்டன்ஸ் அணி மோதியது.

அதில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணியின் தலைவர் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் மெக்கர்க், பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த நிலையில் மெக்கர்க் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பிரித்வி ஷா 11 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.அடுத்து களமிறங்கிய அக்சர் படேல், ரிஷப் பண்ட் ஆகியோர் இருவரும் இணைந்து நிலைத்து ஆடினர். பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்ட அக்சர் படேல் , ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் அக்சர் படேல் 43 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி காட்டினர்.

பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இந்த ஜோடியில் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக சகாவுடன், சாய் சுதர்ஷன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் விருதிமான் சகா 39 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஓமர்சாய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்ஷன், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்தநிலையில் 65 (39) ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து களமிறங்கிய ஷாரூக்கான் 8 ரன்னும், ராகுல் தேவாட்டியா 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதனிடையே மறுமுனையில் அதிரடியாக ரன்கள் குவித்து அரைசதத்தை பதிவு செய்திருந்த டேவிட் மில்லர் 55 (23) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக ரஷித் கானுடன், சாய் கிஷோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய சாய் கிஷோர் 13 (6) ரன்களில் போல்ட் ஆனார். முடிவில் அதிரடி காட்டிய ரஷித் கான் 21 ரன்களும்,

மோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக டார் சலாம் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி திரில் வெற்றிபெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles