தங்குவதற்கு அறைகேட்ட மகனை அடித்து கொன்ற தந்தை – கண்டியில் கொடூரம்

மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் தங்குவதற்கு வீட்டில் அறையொன்றைகோரிய மகனை அவரின் தந்தையும், சகோதரியின் கணவரும் அடித்து படுகொலை செய்துள்ள பெருந்துயர் சம்பவமொன்று கண்டி – ஹசலக பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான சுனில் நிஷாந்த என்ற 28 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நிரந்தர தொழில் எதுவுமில்லாததால் கூலிவேலை செய்தே சுனில் தனது குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். தனது பெற்றோரின் வீட்டில் பின்பகுதியில் இவர்களுக்காக அறையொன்று ஒதுக்கப்பட்டிருந்தது. அதில்தான் வசித்துவந்துள்ளனர்.

மூன்று வாரங்களுக்கு முன்னர் சுனிலின் மனைவிக்கு மற்றுமொரு குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வீட்டினுள் அறையொன்றை கோரியுள்ளார். இதனை அடிப்படையாக வைத்தே கடந்த 6 ஆம் திகதி மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சுனிலின் தந்தையும் மச்சானும் இணைந்து அவரை கடுமையாக தாக்கினர் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சுனில் மஹியங்கனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரின் சடலம் ஊருக்கு கொண்டுவரப்பட்டது. பிரதேச வாசிகள் உறவினர்களிடம் ஒப்படைக்கவில்லை. ஊரிலுள்ள பிரஜா நிலையத்தில் வைத்து இறுதி சடங்கி நடத்தினர்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

https://www.facebook.com/watch/?v=346666763539308

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles