தங்கையை வெட்டி கொலை செய்த அண்ணன் – பியகமவில் பயங்கரம்

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா என்ற 18 வயது உயர்தர வகுப்பு மாணவி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் சில நாட்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரமுற்ற மாணவியின் மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சித்திரவதையைத் தனது காதலனுக்குக் ஹிருணிகா தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தியுள்ளார். கடும் கோபமடைந்த ஹிருணிகாவின் காதலன், ஹிருணிகாவின் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹிருணிகாவின் மூத்த சகோதரன், காதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சகோதரியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உடன்படாத நிலையில், கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து வெறியாட்டம் புரிந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிருணிகாவை, அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles