ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது சர்வதேச கிரிக்கெட் பேரவையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையை கலைத்துவிட்டு, இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்மீது ஐசிசி இடைக்கால தடை விதித்தது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்குள் அரசியல் தலையீடு உள்ளது என சுட்டிக்காட்டியே இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் ரொஷான் ரணசிங்கவின் பதவியும் பறிக்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சு பதவி ஹரின் பெர்ணான்டோவிடம் ஒப்படைக்கப்பட்டது.