நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய 686 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இதுவரை சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் மீண்டும் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 31 ஆம் திகதி காலை 4 மணிக்கு பயணத்தடை மீண்டும் தற்காலிகமாக தளர்த்தப்படும்.
