தனிவழி பயணத்துக்கு சு.கவின் மத்தியக்குழு பச்சைக்கொடி!

அடுத்து வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் தனித்து போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதென ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்‌ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தேங்காயொன்றின் விலை 100 ரூபா. 5 ஆயிரம் ரூபாவை அச்சிட்டு வழங்குவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. குறிப்பிட்டளவு அரச ஊழியர்களே இருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?

நாட்டில் ஆறரை லட்சம்பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்கு செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளுக்கும் போஷாக்கு கிடைப்பதில்லை. என்ன செய்வதென சுதந்திரக்கட்சியிடம் பலரும் கேட்கின்றனர். நாம் தெளிவானதொரு முடிவை எடுத்துள்ளோம்.

அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் சுதந்திரக்கட்சி தலைமையில் கூட்டண அமைத்து போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.” – என்றார்.

Related Articles

Latest Articles