மலையக மக்கள் முன்னணி தனிவழி பயணத்துக்கு தயாராகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கட்சியையும், தொழிற்சங்க நடவடிக்கையையும் பலப்படுத்தும் நடவடிக்கையில் முன்னணி இறங்கியுள்ளது.
இதன்படி முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணனின் ஆலோசனையின் பிரகாரம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை உயர்பீட உறுப்பினரும், தொழிற்சங்க பிரிவின் நிதிச்செயலாளருமான புஷ்பா விஸ்வநாதன் மேற்கொண்டுவருகின்றார். நேற்று முன்தினம் உடபுஸல்லாவ பகுதியில்கூட மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
20 ஐ ஆதரித்த மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் அரவிந்தகுமாருக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை, அடையாள வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு தன்னிச்சையான முறையில் ஆதரவு உட்பட முன்னணியின் சில தன்னிச்சையான நடவடிக்கைகளால் முற்போக்கு கூட்டணியின் இதர பங்காளிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றன.
இனிவரும் தேர்தல்களில் மலையக மக்கள் முன்னணி இன்றியே போட்டியிட வேண்டும் எனவும் கூட்டணி உறுப்பினர்கள் வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையிலேயே தனிவழிக்கான ஆயத்தங்களில் ராதா இறங்கியுள்ளார்.










