அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு அந்த நாட்டு நீதிமன்றம் விதித்திருந்த தடைகளை தளர்த்தி வாட்ஸ்அப் சமூக செயலியை பயன்படுத்தவும், இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கும் அனுமதி வழங்கியுள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட பிணை உத்தரவில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கோரி, தனுஷ்க குணதிலக்க தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே சிட்னி – டவினிங் சென்டர் பிரதேச நீதிமன்றத்தினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
