தபால்மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

நாளை (04) மாவட்ட தேர்தல் செயலகம், அலுவலகம் மற்றும் பொலிஸ் நிலையங்களில் தபால்மூல வாக்குகளை அளிக்க முடியும் என ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க கூறினார்.

தேர்தல் ஆணைக்குழு, பிரதேச செயலகப் பிரிவுகள் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடுவோர் முதல் கட்டமாக வாக்களிக்கவுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட அரச உத்தியோகத்தர்களும் தபால்மூலமாக வாக்களிக்கவுள்ளனர்.

04ஆம், 05 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் வாக்களிக்க தவறியவர்களுக்கு எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles