தமிழக நிவாரணத்தில் முறைகேடு – அக்கரப்பத்தனை தோட்டத்தில் போராட்டம்

இந்திய அரசால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் முறைகேடாக வழங்கப்படுவதாக தெரிவித்து அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தை சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சனசமூக நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்டத்தில் 200 குடும்பங்கள் இருந்தபோதும் வேலை செய்யும் 110 குடும்பங்களுக்கு மாத்திரம் 10 கிலோ கொண்ட அரிசி பொதி இன்று (22.06.2022) தோட்ட நிர்வாகத்தால் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிலையில் அனைத்து மக்களுக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்க வேண்டுமென தெரிவித்து, தோட்ட  நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

தோட்ட உதவி முகாமையாளர் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் 1நிவாரணப் பொருட்கள் வழங்குவதாக தொழிலாளர்களுக்கு அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இதனைப் பெற்றுக் கொள்வதற்காக தொழிலாளர்கள் வந்தபோது 110 குடும்பங்களுக்கு மாத்திரம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்ததை அடுத்து தோட்ட அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.

அத்தோடு  நிவாரணம் கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது தேவையில்லை என மக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து தோட்ட அதிகாரிகள் அரிசி வழங்கும் நிலையத்தை மூடி சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அரிசி வைத்திருந்த களஞ்சியசாலையை முற்றுகையிட்டனர் .

அதேவேளை  கல்மதுரை, ஆகரல்பெத்த, மோர்சன் ஆகிய தோட்டத்திற்கு வழங்கப்பட இருந்த அரிசியையும் வாகனத்தில் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles