தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இலங்கை மக்களுக்கு வழங்கிய நிவாரணப் பொருட்கள், வறுமையில் வாடும் மலையக மக்கள் உள்ளிட்ட ஏனைய மாவட்டத்தில் வறுமையில் உள்ள அனைவருக்கும் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறிப்பாக மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் சிபாரிசுகளுடன் அரசாங்க அதிபர் ஊடாக மலையகத்தில் வறுமையில் வாடும் மக்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவது கட்டாயமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணப் பொருட்கள், பொருளாதார நெருக்கடியால் துன்பப்படும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் எனவே, இவற்றை உரிய அனைவருக்கும் சரியாக பகிர்ந்தளிப்பது அனைவரதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.










