தமிழரசுக் கட்சியின் ஆதரவு யாருக்கு? 11 ஆம் திகதி இறுதி முடிவு!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி கூடவுள்ளது.

வடக்கு, கிழக்கிலுள்ள சில தமிழ்த் தேசியக் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுவேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனை பெயரிட்டுள்ளது.

எனினும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளெனக் கருதப்படும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையிலேயே இது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக 11 ஆம் திகதி மத்திய குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

 

Related Articles

Latest Articles