தமிழ் பாடத்திட்டத்தில் மலையக இலக்கியம் புறக்கணிப்பு! இன அழிப்புக்கான அடித்தளமா?

இலக்கியம் என்பது ஒரு சமூக அடையாளம் . எந்த ஒரு இலக்கியமும் மக்களையும் வாழ்வியலையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் ஆவணம் . பாடசாலை கல்வி முறைக்குள் இலக்கியம் மாணவர்களுக்காக பாடநெறியாக இருப்பதற்கான காரணமும் அதுதான் . மாணவர்கள் ஒரு புவியியல் அமைப்பிலும் ஒரு வாழ்வியலை புரிந்துக்கொள்ளும் சான்றாதாரமே இலக்கியங்கள் தான் .

இதனடிப்படையில் இலங்கை கல்வி வரலாற்றில் மலையக இலக்கியங்கள் உயர் தர கலைபிரிவில் ஒவ்வொரு வருடமும் இடம் பெற்று வந்திருக்கின்றது . ஆனால் 2017ம் ஆண்டு இடம்பெற்ற புதிய பாடமாற்றத்தின் போது உயர் தர தமிழ் பாடத்தில் மலையக இலக்கியங்கள் இடம்பெறாமை என்பது ஒரு இன அழிப்புக்கு அடித்தளம்.”

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளரும் பிரஜாஷக்தி அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் நாயகமுமான பாரத் அருள்சாமி தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடங்கங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதுவரையுள்ள மாணவர்களுக்கு ஈழத்து இலக்கியத்தில் மலையக அத்தியாயம் இல்லாதொழிக்க பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாது மலையக இலக்கியங்கள் தரமற்றமை , இறந்த ஒருவரது இலக்கியங்கள் பாடபரப்புக்குள் உள்வாங்கபடவேண்டும் என்ற காரணங்களை முதன்நிலை படுத்தி இச்செயல்பாடு இடம்பெற்று இருப்பது பெரும் கவலைக்குறியது.

இலக்கிய தரத்தினை உறுதிசெய்ய ஒரு தரப்பினால் மட்டுமே முடியாத காரியம் ஏனெனில் அது மக்கள் வாழ்வியல் இலக்கியம் ஆகவே அக்காலத்தில் இப்படிபட்ட ஒரு சம்பவம் நடந்திருந்தும் அப்போதய ஆட்சியாளர்களின் கவனக்குறைவு தம்மக்கள் குரலினை ஒடுக்கப்பட்ட சம்பவமாக காணப்படுகின்றது. மொழிகளுக்கான அமைச்சர் ஒருவரும் கல்விக்கான இராஜாங்க அமைச்சரும் இருந்தும் இவ் வரலாற்று தவறை இழைத்தமை வேதனை அளிக்கின்றது.

எமது வரலாறு பலரின் வியர்வை இரத்தம் கலந்தவை. பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தொட்டு அக்காலத்தில் மலையக எழுத்தாளர்களாலும் கல்வியலாலர்களினாலும் பின் பல தலைவர்களினாலும் பாதுகாக்கப்பட்டவை. எனவே எதிர்வரும் காலங்களின் தனிப்பட்ட ஒரு சிலரது முடிவுகளால் மலையகம் எனும் சமூக குரலினை அழிக்கபடுவதென்பது ஒரு இன அழிப்பாகவே கருதி

எதிர்வரும் காலங்களில் மலையக இலக்கியங்களை பாடப்பரப்பில் கட்டாயமாக்குவதற்கான செயல் திட்டமாக தற்போது முன்மொழியப்படும் கல்வி கொள்கையில் எமது இலக்கிய பாடப்பரப்பை கட்டாயமாக உள்வாங்க எமது  மைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் முன்மொழிவு ஆவணம் ஒன்றினை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் நாம் கையளிக்க உள்ளோம்.

எனவே எல்லா பேதங்களை மறந்து மலையக மக்களாய் நாம் எமது ஆலோசனைகளை வழங்கி எமது உரிமைகளை பாதுகாப்போம். பிரஜாஷக்தி அபிவிருத்தி செயல்திட்டத்தின் ஊடாக நாம் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள்,ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கல்வி சமூகத்தை சார்ந்த பலரின் உதவியுடன் நாம் இந்த ஆவணத்தை தயார் படுத்த உள்ளோம் என பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

Related Articles

Latest Articles