எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியாகியுள்ளது. எனவே, தமிழ் பேசும் மக்களும் அவரின் வெற்றியில் பங்காளிகளாக வேண்டும் – என்று ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் மூன்றுபேர் கொண்ட குழுவின் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளருமான சுப்பையா ஆனந்தகுமார் தெரிவித்தார். தெரிவித்தார் தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கு உத்தேசித்துள்ள தமிழ்த் தேசியக் கட்சிகள் தமது முடிவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், ஜனாதிபதிக்கு ஆதரளிப்பது குறித்து சாதகமாக பரிசீலிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சுப்பையா ஆனந்தகுமார்
விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, \
“ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அவருக்கான ஆதரவு பெருகிவருகின்றது. எதிரணிகளால் நடத்தப்பட்டுள்ள இரகசிய கருத்து கணிப்புகளில்கூட ரணிலுக்கான ஆதரவு அலை அதிகரித்துவருவது தெரியவந்துள்ளது.
ஏனெனில் நாட்டை மீட்கக்கூடிய அரசியல் அனுபவமும், ஆளுமையும் ரணில் விக்கிரமசிங்கவிடமே உள்ளது. இது மக்களுக்கு தெரியும். இந்த ஜனாதிபதி தேர்தலானது இலங்கையின் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்ற தேர்தலாகும். எனவே, சவாலை ஏற்காது ஓடிய தலைவர்களையும், அனுபவமில்லாத – வாய்ச்சொல் வீரர்களையும் மக்கள் நம்ப தயாரில்லை.
சவாலை ஏற்று, வரிசை யுகத்துக்கு முடிவு கட்டி, நாட்டை மீட்டெடுத்து தற்போது சிறந்த வழியில் ஜனாதிபதி பயணித்துக்கொண்டிருக்கின்றார். அதே வழியில் பயணித்தால் நாடு விரைவில் முன்னேறும் என்பது உறுதி. வங்குரோத்தடைந்த நாடொன்று இவ்வளவு சீக்கிரம் மீண்டெழுந்தது கிடையாது. இலங்கையில் அது நடந்துள்ளது. அதற்கு ரணிலின் தலைமைத்துவமே காரணம்.
தமிழ் மக்களுக்கும் இந்த தேர்தல் மிக முக்கியமாகும். தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைகள் குறித்து என்றும் கவனம் செலுத்தக்கூடிய இனவாதமற்ற – மதவாதமற்ற தலைவரை தெரிவுசெய்து, அதன்மூலம் தமது உரிமைகளை வெல்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. அதனை மதிநுட்பத்துடன் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாறாக இது உணர்வு அரசியல் நடத்த வேண்டிய நேரம் அல்ல. மலையக மக்களின் ஆதரவும் ஜனாதிபதிக்கு உறுதியாகியுள்ளது.” – என்றுள்ளது.