கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை கிரவனாகெட்டிய – கொலபிஸ்ஸ பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தம்புள்ளையில் தொழில்புரிந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி ஊர் திரும்பிய 36 வயதுடைய நபரொருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தம்புள்ளையில் வைத்து குறித்த நபரிடம் கடந்த 27 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்த நிலையில், பரிசோதனை முடிவு வெளிவருவதற்கு முன்னரே 28 ஆம் திகதி அவர் ஊர் திரும்பியுள்ளார்.
பிசிஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியானது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றாளர் பொல்கொல்ல வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.










