தயாசிறிக்கு உப தலைவர் பதவி வழங்குவது பற்றி முடிவு இல்லை!

“நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவராக நியமிப்பதற்குரிய எந்தவொரு முடிவும் கட்சிக்குள் எடுக்கப்படவில்லை. அது பற்றி கலந்துரையாடப்படவும் இல்லை என்று திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சியை சார்ந்தவர். கடந்த பொதுத்தேர்தலில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். அவருக்கு எமது கட்சியில் உப தலைவர் பதவி வழங்குவது பற்றி கட்சிக்குள் கலந்துரையாடப்படவில்லை. யோசனையும் முன்வைக்கப்படவில்லை. கட்சியின் செயற்குழுவும் இது பற்றி அவதானம் செலுத்தப்படவில்லை.” – என்றார்.

Related Articles

Latest Articles