தயாரிப்பாளரை பலியெடுத்த கொரோனா : மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் மரணம்

அஜித், விஜய், கமல் என பல டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து இருக்கும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் சுவாமிநாதன் இன்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

வைரஸ் தொற்று இந்தியாவில் மிக வேகமாகப் பரவி வருகிறது. தினம் தோறும் இந்தியாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது வரை இந்தியாவில் 2.2 மில்லியன் மக்கள் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் உலக அளவில் இந்தியாவில் தான் வைரஸ் இப்போது அதிகம் பரவி கொண்டிருக்கிறது.

இன்னிலையில் சினிமா நட்சத்திரங்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாவதும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் அஜித், விஜய், கமல் ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பாளர் வி சுவாமிநாதன் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்திருக்கிறார்.

அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியாகி இருக்கிறார். இவர் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் மூலமாக பல்வேறு வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். வி சுவாமிநாதன் இறந்த செய்தி சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

வி சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் ராஜா கும்கி படத்தில் காமெடியனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் முன்பே அவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனின் மகனாக நடித்து இருந்தார். ஆர்யா, சந்தானம் உடன் அவர் செய்த காமெடி நல்ல வரவேற்பை பெற்றது. கும்கி அஸ்வினுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமிநாதன் தொண்ணூறுகளில் இருந்து பல முன்னணி ஹீரோக்களுடன் படங்கள் தயாரித்து வந்திருக்கிறார். சரத்குமார் நடித்த அரண்மனை காவலன் என்ற படம் தான் இவரது முதல் படம். அதற்கு பிறகு கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம் படத்தையும் அவர் தயாரித்திருந்தார். சுந்தர் சி தான் அந்த படத்தை இயக்கியிருந்தார்.

சுந்தர் சி உடன் அவர் தொடர்ந்து 5 படங்களில் பணியாற்றி இருக்கிறார். உனக்காக எல்லாம் உனக்காக, உன்னை தேடி, கண்ணன் வருவான், உள்ளம் கொள்ளை போகுதே என தொடர்ந்து சுந்தர் சி படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் தளபதி விஜய் நடித்த பிரியமுடன் மற்றும் பகவதி ஆகிய படங்களையும் தயாரித்தது சுவாமிநாதன் தான். பகவதி படத்தில் ஒரு காட்சியிலும் சுவாமிநாதன் நடித்து இருந்தார்.

அஜித்துடன் இரண்டு படங்களில் அவர் பணியாற்றி இருக்கிறார். உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் மற்றும் உன்னை தேடி ஆகிய படங்களை அவர் தயாரித்து இருக்கிறார்.

மேலும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய படம் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், அதையும் லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. கடைசியாக சுவாமிநாதன் தயாரித்திருந்த படம் ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்த சகலகலா வல்லவன் படம். அதனை சுராஜ் இயக்கி இருந்தார்.

சுவாமிநாதன் மறைவுக்கு முன்னணி சினிமா நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles