தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெகுவிரைவில் வெளியிடப்படும் என்று பிரதமரும், கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் எழுந்த சர்ச்சையை அடுத்து தொடுக்கப்பட்ட வழக்கு கடந்தவாரம் முடிவுக்கு வந்தது. தற்போது வினாத்தாள் திருத்தும் பணி நடக்கின்றது. வெகுவிரைவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” -எனவும் அவர் கூறினார்.










