தரவரிசையில் வரலாறு படைத்த மொராக்கோ:முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறிய முதல் அரபு நாடு

 

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஆண்கள் அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைந்து மொராக்கோ அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் FIFA உலகத் தரவரிசையின் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம்பிடித்த முதல் அரபு நாடு என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்த மொராக்கோ, இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் பிரேசில் மற்றும் போர்த்துக்கல் அணிகளையும் தரவரிசையில் முந்தியுள்ளது.

அண்மைக்கால சர்வதேசப் போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டமே இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

மேலும், 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் FIFA தரவரிசையில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த முதல் ஆபிரிக்க நாடு என்ற பெருமையையும் மொராக்கோ பெற்றுள்ளது. இதற்கு முன்னர் நைஜீரியா இந்தச் சாதனையைப் படைத்திருந்தது.

2027ஆம் ஆண்டு ஆபிரிக்க நாடுகளுக்கான கால்பந்துக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் மொராக்கோ தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வருவதுடன், அண்மையில் நைஜர் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles