தலவாக்கலை, சென்கிளயார் பகுதியில் புதிதாக மதுபானசாலையொன்றை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தலவாக்கலை நகரில் மதுபானசாலைகள் அமைந்துள்ள நிலையில், நகரில் இருந்து சிறியளவு தூரமே உள்ள நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதியில் எதற்காக மதுபானசாலை அமைக்கப்பட வேண்டும் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மக்கள் ஆட்சேபனை தெரிவிக்க நாளை மறுதினம் 24 ஆம் திகதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை முறைப்பாடுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன என்று தெரியவருகின்றது.











