தலவாக்கலை பஸ் நிலையத்தில் குளவிக் கூடுகளால் ஆபத்து

தலவாக்கலை பஸ் நிலைய கட்டடத்தில் குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளதால் பயணிகளும் பிரதேசமக்களும் பெரும் அச்சமடைந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

பஸ் நிலைய கட்டடத்தில் பல இடங்களில் பெரிய பெரிய குளவிக் கூடுகள் கட்டப்பட்டுள்ளன.

குளவிக்கூடுகளை சுற்றி காகங்கள் மற்றும் புறாக்கள் சுற்றித்திரிவதால் அந்த பறவைகள் குளவிக் கூடுகளை கிளறி விபத்து ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

பஸ் நிலையத்துக்கு அண்மையில் காணப்படும் கடைகளுக்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தொடர்ந்து வந்து போவதால் குளவிக் கூடுகள் கலைந்தால் அதிகமானோர் பாதிக்கப்படுவார்கள். இதனால் இங்கு பாதுகாப்பற்ற நிலையேற்பட்டுள்ளது.

எனவே மக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு குளவிக்கூடுகளை விரைவில் அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தலவாக்கலை பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles