“வாழும் புத்தர்களின் மறு அவதாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்”, “சீனாவிற்குள் வாரிசு தேடப்பட வேண்டும்,” “வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை”, இதுவே சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும், இவ்வாறான கருத்துக்களை ஒரு நாத்திக அரசாங்கம் கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கும். ஆனால் தலாய் லாமாவோ, தான் மறு அவதாரம் எடுப்பாரா இல்லையா என எந்த கருத்தையும் வெளியிடவில்லை.
இத்தகைய அதிகாரத்தை வலியுறுத்துவது, “மதம் மக்களின் அபின்” என்று கூறும் கம்யூனிச சித்தாந்தத்தின் அடித்தளத்தையே அவமதிக்கும் செயலாகும். சீனாவின் சொந்த உயர்மட்ட அதிகாரிகள், சில ஆண்டுகளுக்கு முன்புதான் அதன் உறுப்பினர்களுக்கு நாத்திகத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூறினர், மேலும் அவர்கள் மத்தியில் உள்ள மத நம்பிக்கையாளர்களை தூய்மைப்படுத்துவதற்கான பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர்.
ஆனால் இப்போது அதன் உயர்மட்டத் தலைவர்களும் அவர்களின் கல்விச் சட்டமியற்றுபவர்களும் மிகவும் வெளிப்படையாக திபெத்திய பௌத்தத்தின் மறு அவதார நம்பிக்கையைத் தழுவிக்கொண்டிருக்கிறார்கள், இருப்பினும் ஒரு வக்கிரமான வழியில் மற்றும் ஒரு அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்கும் தவறான நோக்கத்திற்காக, நாத்திகத்தைக் கடைப்பிடிக்கும் இவ்வாறானார் தங்கள் மௌனத்தில் இடிமுழங்கச் செய்கின்றனர்.
ஜூன் 29 அன்று சீனா திபெட்டாலஜி ஆராய்ச்சி மையம் மற்றும் அனைத்து சீனப் பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், “திபெத் தன்னாட்சிப் பகுதி விவகாரங்களில் வல்லுநர்கள்” என்று அழைக்கப்படும் சீன மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர், அவர்கள் தங்கள் அரசியல் தலைவர்கள், திபெத்திய காலனித்துவ குடிமக்கள் மீது மிருகத்தனமான அதிகாரத்தை வெளிப்படையாக பிரயோகிப்பதற்கு ஒரு விசித்திரமான மேலங்கியை போர்க்க முற்பட்டுள்ளனர்.
வாழும் புத்தர்களின் மறு அவதார பாரம்பரியம் தொடருமா என்ற கேள்விக்கு, சீனா திபெட்டாலஜி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜாங் யுன், இது ஒரு வரலாற்று பாரம்பரியம் என்பதால் இந்த பாரம்பரியம் தொடரும் என்றும் சீனாவின் மத நிர்வாகம் 2007 ஆம் ஆண்டில் திபெத்திய புத்த மதத்தின் வாழும் புத்தர்களின் மறுபிறப்பு பாரம்பரியம் குறித்த நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றார். இந்த பாரம்பரியத்தை சில நபர்கள் மாற்றவோ இடைநிறுத்தவோ கூடாது என அவர் கூறியதாக, சீனாவின் அதிகாரப்பூர்வ globaltimes.cn ஜூன் 29 அன்று மேற்கோளிட்டுள்ளது.
மறு அவதாரம் எடுக்க வேண்டாம் என்ற முடிவு அல்லது அவர் மறுஅவதார வாரிசுகளின் வரிசையில் கடைசியாக இருக்கலாம் என்று தற்போதைய தலாய் லாமா ஒரு முறை வெளியிட்ட கருத்துகளை ஜாங் சுட்டிக்காட்டுகின்றார்,
“மறு அவதாரம் எடுப்பவருக்கு அவர் எங்கு, எப்படி மறுபிறப்பு எடுக்கிறார், அந்த மறு அவதாரம் எப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும், மற்றும் 15வது தலாய் லாமா அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அவருக்கு முறையான அதிகாரம் உள்ளது” என்று அமெரிக்கா தனது “திபெத்திய கொள்கை மற்றும் ஆதரவுச் சட்டம் 2020” இல் தெரிவித்துள்ளது. திபெத்திய பௌத்த மறு அவதார முறையைப் பற்றித் தெரிந்தவர்கள் இது விதிவிலக்கில்லாதது என்பதைக் காணலாம். ஆனால், இந்தச் சட்டம் “சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது” என்று சீனா விமர்சிக்கிறது. ஏனெனில் ஒரு திபெத்திய பௌத்த குருவின் மறுபிறவியை அங்கீகரிப்பதற்காக அதன் தலைவர்களின் மத சார்பற்ற நம்பிக்கை சான்றுகளில் இது ஒரு பெரிய கேள்விக்குறியை எழுப்புகிறது.
அதன் சட்டபூர்வமான தவறான அனுமானத்தின் அடிப்படையில், திபெத்திய பௌத்தத்தின் வாழும் புத்தர்களின் மறு அவதார நடைமுறை குறித்த சீனாவின் 2007 நடவடிக்கைகள் “வாழும் புத்தர் மறு அவதாரம் மத்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்” மற்றும் “வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை” என்று ஜாங் கூறினார். இந்த நடவடிக்கைகளைப் படிக்கும் எவரும், திபெத்திய பௌத்தர்களின் நம்பிக்கை ஆன்மீக அம்சத்தில் அவை மொத்தமாக குறுக்கிடுவதை எந்த விவேகமான நாத்திகனும் கூட பேசமாட்டார்கள் என்பதைக் காணலாம்.
சமீபத்திய தசாப்தங்களில் திபெத்திய புத்த மறு அவதாரங்கள் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன; எனவே, நாத்திக சீனா, வற்புறுத்தல் மற்றும் மிருகத்தனமான சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர, தனது சொந்த அடக்குமுறை ஆதிக்கத்தில் கூட இருக்க முடியாத ஒரு சட்டபூர்வமான தன்மையைக் கருதி இத்தகைய அயல்நாட்டு விதிகளை உருவாக்குவதன் மூலம் தன்னை ஏளனப்படுத்துகிறது.










