🛑தலாவ பஸ் விபத்து! #update
🛑 17 வயது மாணவன் பலி: சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்தவர். கருத்தரங்கில் பங்கேற்று வீடு திரும்பும்வேளையிலேயே துயர் சம்பவம்.
🛑உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மற்றும் சாதாரண தரப்பரீட்சை கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் உட்பட பஸ் விபத்துக்குள்ளாகும்வேளை 47 பேர் இருந்துள்ளனர்.
🛑காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
🛑அநுராதபுரம் வைத்தியசாலையில் 31 பெண்கள் உட்பட 47 பேர் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
…………..
அநுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் மாணவரொருவர் பலியாகியுள்ளார். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 36 பேர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. மேலும் 10 பேர் தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.
தலாவயில் இருந்து பயணித்த பயணிகள் போக்குவரத்து பஸ்ஸே வீதியை விட்டு விலகி, பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
க.பொ.த உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் உட்பட சுமார் 60 பேர்வரை பஸ்ஸில் பயணித்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.










