கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெண் தாதியர் தங்கும் விடுதிக்குள் இரகசியமாக உள் நுழைந்து உள்ளாடைகளை திருடிய வைத்தியசாலை ஊழியரை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து மருதானை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரிடமிருந்து மூன்று உள்ளாடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தாதியர் தங்கும் விடுதியில் பெண்களின் உள்ளாடைகள் காணாமற் போவது தொடர்பாக விடுதியில் தங்கியிருக்கும் தாதியர் வைத்தியசாலை பாதுகாப்பு பிரிவினரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் (19) அதிகாலை சந்தேக நபர் விடுதிக்குள் நுழைந்து உலர விட்டிருந்த உள்ளாடைகளை திருடிக் கொண்டு வெளியேறியபோது பாதுகாப்பு ஊழியர்களால் பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
