நீர்கொழும்பு சிறையிலிருந்து 166 பெண் கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தால் அங்குள்ள கட்டடங்களுக்குக் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் அனைவரும் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதலின் போது சிறைச்சாலை வளாகம் சேதங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, அவசர பாதுகாப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அங்கிருந்த 166 பெண் கைதிகளும் வெளியேற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.

கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் , நீர்கொழும்பு சிறைச்சாலையில் அவசர புனரமைப்புப் பணிகளை அதிகாரிகள் ஆரம்பிப்பதற்கு ஏதுவாக, கைதிகள் அனைவரும் வாரியபொல, போகம்பரை, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் எஞ்சியுள்ளோரும் விரைவில் ஏனைய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles