பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு

பசறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பது/கலைமகள் தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு
2026 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகள், தலைமைத்துவத் திறன், பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சிக் கருத்துக்களை வளர்க்கும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வில் பாடசாலையின் அதிபர் தலைமையேற்று உரையாற்றியதுடன், மாணவர் பாராளுமன்றத்தின் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தமது பொறுப்புகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.

இதன் பின்னர் நடைபெற்ற கன்னி அமர்வில் பாடசாலையின் கல்வி முன்னேற்றம், ஒழுக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தூய்மை, விளையாட்டு மற்றும் மாணவர் நலன் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து மாணவர்கள் கருத்துகளை முன்வைத்து கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் சிறப்புற அமைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மாணவர்களின் தலைமைத்துவம், பேச்சுத்திறன், முடிவெடுக்கும் ஆற்றல் மற்றும் பொது நிர்வாகம் தொடர்பான அறிவை மேம்படுத்தும் வகையில் இந்த மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வு பயனுள்ளதாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

த.டிமேஷன்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles