தாய்வான் நிலநடுக்கம்: 9 பேர் பலி – 900 இற்கு மேற்பட்டோர் காயம்!

தாய்வானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாய்வானில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இன்று (03) காலை 7.4 மெக்னிட்யூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தீவின் கிழக்கு கடற்கரையை உலுக்கிய இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:58 மணிக்கு பதிவாகியுள்ளது.

Hualien நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர்கள் (11 மைல்கள்) தூரத்தில் 34.8 கிலோமீட்டர்கள் (21 மைல்கள்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்போது, நெடுஞ்சாலை சுரங்கங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

தாய்வானின் தேசிய தீயணைப்பு நிறுவனம் (NFA) இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாகவும் 900 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நான்கு மினி பஸ்களில் பயணித்த Silk’s Place Hotel Taroko ஊழியர்கள் 50 பேர் உட்பட குறைந்தது 131 பேர் தற்போது சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர்.

அதிகாரிகள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

Hualien County இல் உள்ள சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஜெர்மன் பிரஜைகள் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்புகள் அனைத்தும் Hualien County-இல் மாத்திரம் பதிவாகியுள்ளதுடன், அவர்களில் மூவர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது.

அவர்கள் மீது பாறைகள் உருண்டு வீழ்ந்துள்ளன.

Hualien County-இல் கட்டடங்கள் சில இடிந்துள்ளதுடன், அங்கு மின்சாரம் மற்றும் போக்குவரத்து வசதிகள் தடைப்பட்டுள்ளன.

Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles