திபெத் பூகம்பம்: பலி எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு!

திபெத்​தில்​ ஏற்​பட்​ட பயங்​கர நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும்​ 200 இற்கு மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​.

சீனா​வின்​ ஒரு பகு​தி​யாக உள்​ள ​திபெத்​தில்​, நேபாள எல்​லைப்​ பகு​தி​யையொட்​டி நேற்​று ​காலை 6.35 மணியள​வில்​ சக்​தி வாய்​ந்​த நிலநடுக்​கம்​ ஏற்​பட்​டது. திபெத்​தில்​ உள்​ள மலைப்​பகு​தி​யில்​ சு​மார்​ 10 கிலோமீட்​டர்​ ஆழத்​தில்​ இந்​த நிலநடுக்​கத்​தின்​ மையப்​புள்ளி இருந்​தது.

இதனால்​ ​திபெத்​, நேபாள நாடுகள்​ நிலநடுக்​கத்​தில்​ குலுங்​கின. இந்​த பயங்​கர நிலநடுக்​கம்​ ரிக்​டரில்​ 7.1 ஆக ப​திவானது என அமெரிக்​க பு​வி​யியல்​ ஆய்வு மையம்​ தெரி​வித்​தது. இந்​த நிலநடுக்​கம்​ ​திபெத்​தின்​ ஜிசாங்​க்​ பகு​தியை மைய​மாகக்​ ​கொண்​டு ஏற்​பட்​ட​தால்​ அப்​பகு​தி​யில்​ கடுமை​யான சேதம்​ ஏற்​பட்​டது. இங்​கு வசிக்​கும்​ மக்​கள்​ கடும்​ பீ​தி அடைந்​தனர்​. கட்​டிடங்​கள்​ குலுங்​கிய​தால்​ வீடுகளை ​விட்​டு வெளி​யேறி தெருக்​களில்​ தஞ்​சம்​ புகுந்​தனர்​.

நிலநடுக்​கம்​ ​காரண​மாக ​திபெத்​தின்​ ஷி​காட்​சே நகரம்​ கடுமை​யாக பா​திக்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து நிலநடுக்​கத்​தால்​ பா​திக்​கப்​பட்​ட பகு​தி​களுக்கு மீட்​புப்​படை​யினர்​ ​விரைந்​து சென்று மீட்​புப்​பணி​யில்​ ஈடுபட்​டனர்​. இடிந்​த வீடு​களில்​ சிக்​கிய​வர்​களை மீட்​டனர்​. நிலநடுக்​கத்​தில்​ சிக்​கி இதுவரை 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​.

200-க்​கும்​ மேற்​பட்டோர்​ ​காயமடைந்​து உள்​ளனர்​ என தகவல்​ வெளி​யானது. அவர்​களை மீட்​கும்​ பணி தொடர்​ந்​து நடந்​து வருகிறது. பா​திப்​பு அ​திக​மாக இருப்ப​தால் உ​யிரிழப்​பு எண்​ணிக்கை அ​திகரிக்​கக் ​கூடும்​ என அஞ்​சப்​படு​கிறது. நிலநடுக்​கம்​ ​காரண​மாக ​திபெத்​தில்​ 1,000-க்​கும்​ அ​திக​மான           வீடு​களில்​ ​விரிசல்​ ஏற்​பட்​டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles