திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானம்

டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரத்ன சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் அவர் சர்வதேச அரங்குக்கு விடைகொடுக்கவுள்ளார்.

நாளை (06) அவுஸ்திரேலியாவிற்கு எதிராக காலியில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திமுத் கருணாரத்னவின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது.

36 வயதான திமுத் கருணாரத்ன 99 டெஸ்ட் போட்டிகளில் 7172 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles