தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம் யாழில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிப்பு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு,மாவீரரரின் தாயொருவர் பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தூக்கு காவடியொன்று நினைவிடத்திற்கு வந்ததுடன் , யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஊர்தி பவனிகள் வந்திருந்தன.

Related Articles

Latest Articles