‘திருகோணமலை எண்ணெய் குதங்கள் ஒப்பந்தம்’ – 18 ஆம் திகதி சபையில் முன்வைப்பு

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள புதிய உடன்படிக்கை எதிர்வரும் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அதற்கு முன்னர் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திலும் ஒப்பந்தம் முன்வைக்கப்படவுள்ளது.

திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு தயாராகிவருகின்றன.

அதேபோல இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தை இரத்துசெய்யக்கோரி உயர்நீதிமன்றத்திலும் அடிப்படை உரிமை மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Related Articles

Latest Articles