திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு

முன்னாள் பிரதியமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவரான திருக்குமரன் நடேசனுக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பாக மேலதிக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆணைக்குழுவில் மீளவும் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

நேற்று முன்தினமும், திருக்குமரன் நடேசன் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தார். இதன்போது அவரிடம் 3 மணித்தியாலம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே திருக்குமரன் நடேசனுக்கு, ஆணைக்குழு மீளவும் அழைப்பு விடுத்துள்ளது.

சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள சகல முறைப்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படுமென இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles