திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாக புனரமைக்க இந்தியா உதவும் – நிர்மலா அம்மையார் தெரிவிப்பு

“ திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்.”

– இவ்வாறு உறுதிமொழி வழங்கினார் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீமாட்டியார்.

இன்று முற்பகல் திருக்கோணேஸ்வரரின் புனித பூமியில் வைத்து இந்த உறுதிமொழியை அவர் வழங்கினார்.

மூன்று நாள் பயணமாக இலங்கை வந்துள்ள நிர்மலா சீதாராமன் இன்று காலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.

ஆலய நிர்வாகிகள் அவரை வரவேற்று உரையாடினர். அகில இலங்கை இந்துமா மன்றத்தின் துணைத் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் அப்போது ஆலய நிர்வாகிகள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.

போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டு, ஒல்லாந்தரால் சூறையாடப்பட்ட திருக்கோணேஸ்வரம் ஆலயத்தை இன்று ஓரளவு பேணிப் பாதுகாக்கின்றோம். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயத்தையும் மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கருங்கற்களால், பெருங்கோயிலாகப் புனரமைத்துத் தர இந்தியா முழு உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் திருக்கோணேஸ்வரம் ஆலய நிர்வாகத் தலைவர் துசியந்தன் உட்படப் பலரும் அந்த உரையாடலின்போது உடனிருந்தனர்.

“எமது கோரிக்கையைச் செவிமடுத்த இந்திய நிதி அமைச்சர், மன்னார் திருக்கேதீஸ்வரம் போன்று கோணேஸ்வரத்தையும் புனரமைக்க உதவ முடியும் என்று தெரிவித்தார். அதற்கான முன்னேற்பாடுகள், முறைப்படியான கோரிக்கைகள், அனுமதிகளைப் பெறுவதற்கான நடவடிகைகளை மேற்கொள்ளுமாறு நிர்மலா சீதாராமன் அம்மையார் உற்சாகத்தோடு தெரிவித்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது” – என்று ஆறு. திருமுருகன் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles