கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய, மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும்வரையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு செல்வதற்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
திவுலபிடிய பகுதியில் 39 வயதுடைய பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பைபேணிய பலர் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.










