தீபாவளிக்கு திரைக்கு வருகிறது ‘அண்ணாத்த’

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’.

கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து பின்னணி வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அதாவது இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், விரைவில் சென்னை திரும்பி அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளை முடிக்க இருக்கிறார்.

Paid Ad
Previous articleசீனாவை சீண்டினால் அடித்து நொறுக்குவோம் – அந்நாட்டு ஜனாதிபதி முழக்கம்
Next articleகொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம் முடக்கம்!