தீபாவளியை முன்னிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பே சம்பளம் மற்றும் முற்பணம் வழங்க வேண்டும்!

 

– செந்தில் தொண்டமான் கோரிக்கை –

இவ்வருடம் நவம்பர் 8ஆம் திகதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் தீபாவளி முற்பணத்தை நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முதலாளிமார் சம்மேளனத்திடம் (Employers’ Federation of Ceylon – EFC) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தீபாவளியைத் தோட்டத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடனும் சிறப்புடனும் கொண்டாடுவதற்கு ஏதுவாக, அவர்களின் மாதாந்த சம்பளம் மற்றும் முற்பணம் ஆகியவற்றை முன்கூட்டியே வழங்குவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக நவம்பர் 6ஆம் திகதிக்கு முன்பதாக சம்பளத்தையும், தீபாவளி முற்பணத்தையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles